sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
2.027   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   2 th/nd Thirumurai (இந்தளம்   Location: இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்) God: நீலாசலநாதர் Goddess: நீலாம்பிகையம்மை) இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்) ; அருள்தரு நீலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நீலாசலநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=_RLOwoMa06k  
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன்,
நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து
உலவினான், அடி உள்க, நல்குமே.


[ 1]


குறைவு இல் ஆர் மதி சூடி, ஆடல் வண்டு
அறையும் மா மலர்க்கொன்றை சென்னி சேர்
இறைவன், இந்திரநீலப்பர்ப்பதத்து
உறைவினான்தனை ஓதி உய்ம்மினே!


[ 2]


என் பொன்! என் மணி! என்ன ஏத்துவார்
நம்பன், நால்மறை பாடு நாவினான்,
இன்பன், இந்திரநீலப்பர்ப்பதத்து
அன்பன், பாதமே அடைந்து வாழ்மினே!


[ 3]


நாசம் ஆம், வினை; நன்மைதான் வரும்;
தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம்
ஈசன், இந்திரநீலப்பர்ப்பதம்
கூசி வாழ்த்துதும், குணம் அது ஆகவே.


[ 4]


மருவு மான்மடமாது ஒர்பாகம் ஆய்ப்
பரவுவார் வினை தீர்த்த பண்பினான்,
இரவன், இந்திரநீலப்பர்ப்பதத்து
அருவி சூடிடும் அடிகள் வண்ணமே!


[ 5]


Go to top
வெண்நிலாமதி சூடும் வேணியன்,
எண்ணிலார் மதில் எய்த வில்லினன்,
அண்ணல், இந்திரநீலப்பர்ப்பதத்து
உள் நிலாவுறும் ஒருவன் நல்லனே.


[ 6]


கொடி கொள் ஏற்றினர், கூற்று உதைத்தவர்,
பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர்,
அடிகள், இந்திரநீலப்பர்ப்பதம்
உடைய வாணர், உகந்த கொள்கையே!


[ 7]


எடுத்த வல் அரக்கன் கரம்புயம்
அடர்த்தது ஓர் விரலான், அவனை ஆட்
படுத்தன், இந்திரநீலப்பர்ப்பதம்
முடித்தலம் உற, முயலும், இன்பமே!


[ 8]


பூவினானொடு மாலும் போற்றுஉறும்
தேவன் இந்திர நீலப்பர்ப்பதம்
பாவியாது எழுவாரைத் தம் வினை
கோவியா வரும்; கொல்லும், கூற்றமே.


[ 9]


கட்டர்குண்டு அமண், தேரர், சீர் இலர்,
விட்டர் இந்திரநீலப்பர்ப்பதம்,
எள் தனை நினையாதது என்கொலோ,
சிட்டுஅதுஆய் உறை ஆதி சீர்களே?


[ 10]


Go to top
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியான்,
இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து
அந்தம் இலியை ஏத்து ஞானசம்
பந்தன் பாடல் கொண்டு ஓதி வாழ்மினே!


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்)
2.027   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்துஇலகு
Tune - இந்தளம்   (இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்) நீலாசலநாதர் நீலாம்பிகையம்மை)

This page was last modified on Sat, 24 Feb 2024 17:27:32 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_song.php?lang=tamil&pathigam_no=2.027&thirumurai=2&author=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&paadal_name=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81&pann=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D&thalam=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20(%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)&iraivan=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&iravi=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88;